| ADDED : ஜூன் 13, 2024 12:13 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் நகரில் சுற்றித் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.திருக்கோவிலுார் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் வெறிநாய் பொதுமக்களை துரத்தி துரத்தி கடித்ததில் 14 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் நகரில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.இதனை அடுத்து நகராட்சி சேர்மன் முருகன் தலைமையில், ஆணையர் கீதா முன்னிலையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது என முடிவு செய்யப்பட்டது.இதற்கான சிறப்பு முகாம் நகராட்சி வளாகத்தில் நடந்தது. கால்நடை மருத்துவர்கள் சுகுமார், ஆலமரத்தான், விக்னேஷ், வெங்கடாசலம், மணி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உதவியுடன் 30க் கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது.நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், நகராட்சி சார்பில், நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ள இருப்பதாக நகராட்சி ஆணையர் கீதா தெரிவித்துள்ளார்.