உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா 

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி 25 ஆயிரம் வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 3ம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து வைக்கப் பட்டது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் அம்மனுக்கு 25 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வைத்து மகாதீபராதனை நடந்தது.தொடர்ந்து ஆடிப்பூர விழாவையொட்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டினை வாசவி வனிதா கிளப் பெண்கள் மற்றும் ஆரிய வைஸ்சிய சங்கத்தினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ