| ADDED : ஜூலை 13, 2024 06:22 AM
கள்ளக்குறிச்சி: எறஞ்சி, காச்சக்குடி மற்றும் கூந்தலுார் கிராமங்களில் நிலம் கையகப்படுவத்துவதை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள்தாசில்தார், எம்.எல்.ஏ., விடம் மனு அளித்தனர்.கள்ளக்குறிச்சி தாலுகா, எறஞ்சி ஊராட்சி தலைவர் வேலாயுதம் தலைமையில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுஅளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:வி.ஏ.ஓ., சர்வேயர் உட்படவருவாய்த்துறை அலுவலர்கள் சிலர் எறஞ்சி, காச்சக்குடி மற்றும் கூந்தலுார் கிராமங்களில் உள்ள விளைநிலங்களைஎவ்வித அறிவிப்புமின்றி அளவீடு செய்துள்ளனர்.விசாரணையில், அப்பகுதியில் உள்ள நிலத்தை கையகப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்பகுதி கிராம மக்கள் விவசாயம் செய்துவாழ்வாதாரம் நடத்தி வரும் நிலையில், எவ்வித அறிவிப்புமின்றி நில அளவை செய்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மனு மீது பரீசிலினை மேற்கொண்டு நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பிறகு, கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன், தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமாரிடமும் பொதுமக்கள் மனு அளித்தனர்.