உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி முன் வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளி முன் வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சியில் கச்சிராயபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த சாலையில் கலெக்டர், டி.எஸ்.பி., மார்க்கெட் கமிட்டி, அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.இச்சாலை வழியாக பஸ், லாரி, கரும்பு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இது வாகன போக்குவரத்து மிகுதியான சாலையாக திகழ்கிறது. இச்சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால், சில நேரங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் காலை, மதிய உணவு இடைவேளை மற்றும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரங்களில் அவ்வப்போது சாலையை கடக்கின்றனர். அத்தருணத்தில் அதிகவேகமாக செல்லும் வாகனங்களினால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்லும் சூழல் உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை