உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வயிற்று வலியால் பெண் துாக்கிட்டு தற்கொலை

வயிற்று வலியால் பெண் துாக்கிட்டு தற்கொலை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வயிற்றுவலியால் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துாரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி அன்னபூரணி,26; இவர்களுக்கு மதுமிதா,6; மகேஷ்,2; ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2 வருடங்களாக அன்னபூரணிக்கு வயிற்று வலியால் அவதியடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை அன்னபூரணிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில், வலி தாங்க முடியாததால் அன்னபூரணி வீட்டில் மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அன்னபூரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி