உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

நத்தம் பட்டா மாறுதலுக்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி: இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இ-சேவை மையம் அல்லது சிட்டிசன் போர்டல் வழியாக விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு நில அளவை மற்றும் நில வரித்திட்டத்தில், 'நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்' துவக்கப்பட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ--சேவை மையம் அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen சிட்டிசன் போர்டல் வழியாக விண்ணப்பிக்கலாம்.மேலும், நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் என்னும் புதிய சேவையின் மூலம் பொதுமக்களின் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணையவழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நத்தம் பட்டா வழங்கப்படும். கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை என்ற https://eservices.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 'நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம்' நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் அல்லது சிட்டிசன் போர்டல் வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து நத்தம் பட்டா மாற்றம் செய்து பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை