உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு தரப்பினரிடையே மோதல் கள்ளக்குறிச்சியில் 10 பேர் கைது

இரு தரப்பினரிடையே மோதல் கள்ளக்குறிச்சியில் 10 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 10 பேரை கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் மகன் சதிஷ், 25; இவர் நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் பைக்கில் சென்றார். விருகாவூர் பஸ் நிறுத்தம் அருகே எதிரே மற்றொரு பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் மீது மோதியுள்ளார். இதனால், அங்கிருந்த புகழேந்தி, அய்யாசாமி ஆகியோர் அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்தியதாக சதிைஷ திட்டி அவரது பைக்கை பறித்துக் கொண்டனர். அங்கிருந்து சென்ற சதிஷ், தனது ஆதரவாளர்களை அழைத்துவந்து புகழேந்தி உள்ளிட்டோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில், சதிஷ், நிகேஷ், 21; குமார்,21; சத்தியமூர்த்தி, 20; ராஜிவ்காந்தி, 21; கர்ணன், 21; வெற்றி, 20; முருகன், 21; பூவரசன், 19; உட்பட 10 பேர் மீதும், மற்றொரு தரப்பில் மதன், 21; பரமசிவம், 51; செல்வராஜ், 50; நாராயணசாமி, 30; ஆனந்தன், 28; அய்யாசாமி, 30; மணிகண்டன், 25; செல்வமணி, 21; பிரபு, 28; மணிவாசகம், 34; ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், சதிஷ், நிகேஷ், குமார், சத்தியமூர்த்தி, பூவரசன், பரமசிவம், நாராயணசாமி, ஆனந்தன், பிரபு, மணிவாசகம் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை