உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருக்கோவிலூர் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது. தொடர்ந்து மாலை பஸ் நிலையம் எதிரில் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சிவகுரு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பு முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் சாமிவேல், மாநில செயலாளர் மகாதேவன், மாநில குழு உறுப்பினர் சத்திய பிரியா, மண்டல செயலாளர் பூபாலன் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை