உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 1,960 டன் உரங்கள் வந்தன

 சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 1,960 டன் உரங்கள் வந்தன

சின்னசேலம்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து சின்னசேலத்திற்கு 1,960 டன் உரங்கள் சரக்கு ரயிலில் வந்திறங்கின. கர்நாடகா மாநிலம், மங்களூரு கெமிக்கல்ஸ் மற்றும் உர நிறுவனத்திலிருந்து இருந்து 1,010 மெட்ரிக் டன் யூரியா மற்றும் 950 மெட்ரிக் டன் 20-20 காம்பளக்ஸ் உரங்கள் 31 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் சின்னசேலத்திற்கு நேற்று முன்தினம் வந்தடைந்தன. தொடர்ந்து நேற்று காலை 6:00 மணி முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், சேலம் மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சொசைட்டிகள் மற்றும் தனியார் உர நிறுவனங்களுக்கு கள்ளக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன் மேற்பார்வையில் அலுவலர்கள் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ