மேலும் செய்திகள்
புதுச்சேரி மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது
03-Mar-2025
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே பைக்கில் மதுபாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கொங்கராயபாளையம் அருகே அதே பகுதியைச் சேர்ந்த விஜயராஜ், 22; சுப்ரமணி யன் மகன் பச்சமுத்து, 24; பரமசிவம் மனைவி மல்லிகா ஆகிய 3 பேரும் ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கில் மதுபாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதுகுறித்து வழக்குப் பதிந்து, விஜயராஜ், பச்சமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.தப்பியோடிய மல்லிகாவை தேடி வருகின்றனர்.
03-Mar-2025