உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோபுர கலசத்தை திருடமுயன்ற 2 பேர் கைது

கோபுர கலசத்தை திருடமுயன்ற 2 பேர் கைது

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அடுத்த திருநறுங்குன்றம் பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ வல்லபா விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கோபுர கலசத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இருவர் திருட முயன்றனர்.இதனைப் பார்த்த கிராம மக்கள் இருவரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து, திருநாவலுார் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், பட்டுக்கோட்டை அடுத்த வாத்தக்குடி பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் கென்னடி, 37; என்பதும், கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா மாவிடந்தல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்குமார், 34; என்பதும் தெரியவந்தது.கென்னடி விருத்தாசலத்தில் அறை எடுத்து தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டே திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.போலீசார் வழக்கு பதிந்து கென்னடி, செந்தில்குமாரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ