உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேன் மோதி பைக்கில் சென்ற 2 பேர் படுகாயம்

வேன் மோதி பைக்கில் சென்ற 2 பேர் படுகாயம்

சின்னசேலம்:சின்னசேலம் அருகே, தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில், பைக்கில் சென்ற 2 பேர் படுகாயம் அடைந்தனர். சின்னசேலம் அடுத்த பாண்டியன் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் வெங்கடேசன், 27; அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்னதுரை, 25; இந்த இருவரும் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு,மேல் நாரியப்பனுார், கல்லா நத்தம் சாலையில், பைக்கில் சென்றனர்.அப்போது எதிரே ஊனத்துார் கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சின்னதுரை, 33; என்பவர் ஓட்டி வந்த தனியார் பள்ளி வேன், அந்த பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசன் மற்றும் சின்னதுரை ஆகிய இருவரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !