உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் மழைக்கு 20 வீடுகள் சேதம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் மழைக்கு 20 வீடுகள் சேதம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சராசரியாக 75.02 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கல்வராயன்மலை பகுதியில் பெய்த பலத்த மழையால் கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 46 அடியில் (560 மில்லியன் கன அடி) தற்போது, 41 அடிக்கு (364.30 மில்லியன் கன அடி) நீர் உள்ளது. வினாடிக்கு 460 கன அடி நீர்வரத்து உள்ளது. மணிமுக்தா அணையில் ஷெட்டர்கள் புதுப்பிக்கும் பணியால், தண்ணீர் தேக்கி வைக்க முடியாதததால் வரத்து நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையால் மணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் மொத்தம் 20 கூரை வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன. 2 கால்நடைகள் பலியாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ