உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்துள்ளனர்: கலெக்டர் தகவல்

அரசு மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்துள்ளனர்: கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேர் குணமாகியுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் பிரசாந்த் சந்தித்து, அவர்களின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.பின், அவர் கூறியதாவது:கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோருக்கு தொடர்ந்து உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை (காலை 9:30 மணி நிலவரப்படி) 193 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 53 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.மீதமுள்ள 140 பேர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களை 24 மணி நேரம் சுழற்சி அடிப்படையில் கண்காணிக்க, மற்ற மருத்துவமனையில் இருந்து 56 சிறப்பு மருத்துவர்கள், 10 தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 5 பேரின் உடல் நலம் தேறி வார்டுக்கு மாற்றப்பட்டனர்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 30 பேர் குணமாகியுள்ளதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு மனநல ஆலோசனையும், எதிர்காலத்தில் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதபடி சிகிச்சை அளிக்கப்படும்.கண் குறைபாடு ஏற்பட்ட 3 பேருக்கு, கண் சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இச்சம்பவத்தால் பாதிப்படைந்த இடங்களில், வட்டார மருத்துவ அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் வீடு, வீடாகச் சென்று கள ஆய்வும், மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் 55 பேர் கண்டறியப்பட்டு, மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.உயிரிழந்த 53 பேரில், 39 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்ததும் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

கூமூட்டை
ஜூன் 22, 2024 20:52

மிதி ஆட்கள் கதி என்ன??


அமுதன்
ஜூன் 22, 2024 20:51

கண் இருக்கும் போதே குருடர்கள். இப்போ இருந்த கண்ணும் போச்சு. இவர்கள் மீது இரக்கமே வரலை


raja
ஜூன் 22, 2024 19:46

ஆட்சி செய்ய தெரியலை என்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடுங்க


என்றும் இந்தியன்
ஜூன் 22, 2024 18:59

தன்னுடைய பதவியை தக்கவைத்துக்கொள்ள என்னெவெல்லாம் பொய் சொல்லி பொய் சொல்லி கஷ்டப்படவேண்டியிருக்கின்றது - கலெக்டர் தனது வீட்டில் புலம்பல்


Svs Yaadum oore
ஜூன் 22, 2024 18:43

படத்தில் டாக்டர் கை விரலை காண்பித்து கண் தெரியுதான்னு செக் பன்றார் ...கண்ணே பறி போகுது ..பிறகு எதுக்கு இந்த கருமத்தை குடிக்கிறானுங்க?? ....டாஸ்மாக் விலை உயர்வால் விடியல் ஆட்சியில் கள்ள சாராய விற்பனை அமோகம் .....குடிப்பழக்கம் என்பது மன நோய் ....அதை சாதாரணமாக சொல்லி திருத்த முடியாது .....இவர்களுக்கு சித்த ஆயுர்வேத டாக்டர்களை வைத்து தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு சிகிச்சை , கடுமையான சட்டம் ஒழுங்கு போலீஸ் பாதுகாப்பு என்று செயல்பட்டால்தான் இவர்களை மீட்க முடியும் ...ஆனால் அதெல்லாம் திராவிடனுங்க ஆட்சியில் நடக்காது ....


Barakat Ali
ஜூன் 22, 2024 18:41

உயிர் பிழைத்துள்ளனர் என்று சொல்லியிருப்பார் .... குணமடைவது சாதாரண ஆரோக்கிய நிலைக்கு திரும்புதல் வேறு ... உயிர் பிழைப்பது மரணிக்கவில்லை ஆனால் உறுப்புகள் செயலிழந்தன வேறு ....


Barakat Ali
ஜூன் 22, 2024 18:26

கலெக்டருங்க சொல்லுறதை தண்ணியிலதான் எழுதி வைக்கணும் ... அதுவும் ஆத்து தண்ணியில ....


M S RAGHUNATHAN
ஜூன் 22, 2024 18:11

மாவட்ட ஆட்சியாளர், மற்றும் ஹிந்து மத ஆர்வலர்கள் மிகவும் ஜாக்கிரதையாக செயல் படவேண்டும். குழம்பும் குட்டையில் மீன் பிடிப்பது போல் மிஷனரிகள் மத மாற்றத்திற்கு நிரம்பவும் முயற்சிப்பார்கள். அங்குள்ள ஹிந்து முன்னணி, RSS, மற்றும்.பிஜேபி தொண்டர்கள் விழிப்புடன் செயல் பட வேண்டும்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 22, 2024 19:17

ஏய்யா... இந்த மாநிலம் நல்லாத்தானே இருக்கு...? “ஆமை புகுந்து வீடும், அமீனா புகுந்த வீடும் அழிஞ்சிடும்”..ங்ற பழமொழி மாதிரி... நீங்க குறிப்பிட்டுள்ள மூணு பேரும் உள்ளே நுழைஞ்சா... பிகார், உ.பி., ம.பி., மாதிரி சுடுகாடாய் ஆயிடும், தமிழ்நாடு. உங்களுக்கு ஒருத்தன் நல்லா இருந்தா புடிக்காது... அதுபோல, கீழ இருக்குறவன் மேலே போனா புடிக்காது... கீழே பச்சமொளகா வச்ச மாதிரி இருக்கு போலிருக்கு...? உங்களையெல்லாம் பெத்தாங்களா, இல்ல... செஞ்சாங்களா...?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ