உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் 33 நபர்களுக்கு அடையாள அட்டை

 மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் 33 நபர்களுக்கு அடையாள அட்டை

கள்ளக்குறிச்சி: ம.குன்னத்துாரில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில், 33 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த ம.குன்னத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமுடன் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் கமலசேகரன், மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் ஆர்த்தி, நரம்பியல் டாக்டர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 53 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 33 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. 20 பேர்களுக்கு உதவி உபகரணங்கள் வேண்டி ஆன்லைனில் பதிவேற்றம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை