| ADDED : ஜன 09, 2024 10:32 PM
கள்ளக்குறிச்சி, -சின்னசேலம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், இரு தரப்பை சேர்ந்த 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தலை சேர்ந்தவர் ராமசாமி மகன் அன்பழகன்,37; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் இடம் தொடர்பாகவும், கழிவுநீர் செல்வது சம்மந்தமாகவும் பிரச்னை உள்ளது.இந்நிலையில் கடந்த டிச., 24ம் தேதி இரு குடும்பத்தினருக்கும் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.இது தொடர்பாக அன்பழகன் அளித்த புகாரின் பேரில், சின்னசாமி, அகிலாண்டேஸ்வரி, லட்சுமணன், நல்லதம்பி, விஜயா, சுப்ரமணி, பெரியசாமி மற்றும் இளையராஜா ஆகிய 8 பேர் மீதும், மற்றொரு தரப்பை சேர்ந்த சின்னசாமி அளித்த புகாரின் பேரில், அன்பழகன், ஈஸ்வரன், அபிஷா, ராமர், மூர்த்தி, சின்னதுரை மற்றும் கருப்பையா ஆகிய 7 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.