மேலும் செய்திகள்
குடும்பத்தகராறில் மனைவி கொலை: கணவர் கைது
09-Oct-2024
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருக்கோவிலுார் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் ராஜா, 35; குடிப்பழக்கம் உடையவர். இதன் காரணமாக கணவன், மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு, மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.விரக்தியில் இருந்த ராஜா கடந்த 28ம் தேதி இரவு வீட்டின் பின்புறம் இருந்த கொட்டகையில் துாக்கு போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.இதுகுறித்து அவரது தந்தை பச்சமுத்து கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Oct-2024