| ADDED : பிப் 13, 2024 11:24 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர், துாய்மை பணியாளர் மற்றும் துாய்மை காவலர் ஒருங்கிணைப்பு குழு சார்பில், காத்திருப்பு போராட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் வீராசாமி, ஜீவா, மாவட்ட நிர்வாகிகள் சரவணன், மணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆபரேட்டர், துாய்மை பணியாளர் மற்றும் துாய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கலெக்டர் உத்தரவுபடி டார்ச்லைட், சீருடை, தையல்கூலி, முகக் கவசம் மற்றும் தொட்டி சுத்தம் செய்யும் தொகை 300 ரூபாய் வழங்க வேண்டும். மின்மோட்டார் இயக்க கூடுதல் தொகை, துாய்மை காவலர்களுக்கு நேரடி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகி சிவசங்கர் நன்றி கூறினார்.