மேலும் செய்திகள்
தவறவிட்ட 5 சவரன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
28-Nov-2024
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி, 32; இவர் பக்கத்து தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.நேற்று வாசக்கால் வைக்கும் நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டி கொண்டு சென்றவர் 10:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, குளியலறை மேல் தளத்திலிருந்து சந்து வழியாக மர்ம நபர் வெளியே சென்றதை பார்த்து கூச்சலிட்டார்.உடன் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அந்த நபரை பிடித்து திருநாவலுார் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் மனோகர், 19; எனவும், வீடு புகுந்து பீரோவில் இருந்து 10 கிராம் நகை, 47 ஆயிரம் ரூபாய் திருடியது தெரியவந்தது. உடன் நகை பணத்தை மீட்டு வழக்குப் பதிந்து மனோகரை கைது செய்தனர்.
28-Nov-2024