உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை

காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி பூஜை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவி லில் ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரத சிறப்பு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி கஸ்துாரிபாய் தெரு சித்தி விநாயகர், காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு, நேற்று காலை சித்தி விநாயகர், காமாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. லலிதா சகஸ்ரநாம மற்றும் குங்குமம் அர்ச்சனை நடந்தது. பெண்கள் வரலட்சுமி நோன்பு, வழிபாடு செய்து தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். வழிபாடு செய்த பெண்களுக்கு, வளையல், குங்குமம், பூ மற்றும் நோன்பு கயிறு (மஞ்சள் கயிறு) வழங்கப்பட்டது. இதேபோல் கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவில், கங்கையம்மன் கோவில், மந்தைவெளி மாரியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரத சிறப்பு பூஜைகள் நடந்தது. பால்குட ஊர்வலம் கள்ளக்குறிச்சி கரியப்பா நகர், புற்றுக்கருமாரி அம்மன் கோவிலில் 25ம் ஆண்டு பால் குட ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக கோமுகி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகளில் ஊர்வலம் சென்றனர். பின்பு, அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை