தாட்கோ சார்பில் ஆரி எம்பிராய்டரி பயிற்சி
கள்ளக்குறிச்சி : ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சியில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு :தாட்கோ மற்றும் சென்னை, வேளச்சேரி, விவேஷியஸ் அகாடமி நிறுவனம் இணைந்து டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சியிடுவதற்கான, 30 நாட்கள் பயிற்சியை வழங்குகிறது.விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவும், 18-30 வயதுடையவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். பயிற்சியை முடிக்கும் இளைஞர்களுக்கு, இந்திய தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்கள் வழங்கப்படும். தகுதி வாய்ந்தவர்கள் www.tahdco.comஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணம், உணவு செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். மேலும் விவரங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.