மேலும் செய்திகள்
சங்கராபுரத்தில் முப்பெரும் விழா
04-Oct-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நல சங்கம், வள்ளலார் மன்றம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். சங்க தலைவர் திருவேங்கடம், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், சந்திரசேகர், ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியை குமாரி நன்றி கூறினார்.
04-Oct-2025