உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கால்நடைகள் கொண்டு செல்வதில் விதிமுறையை மீறினால் நடவடிக்கை

கால்நடைகள் கொண்டு செல்வதில் விதிமுறையை மீறினால் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வாகனங்களில் கால்நடைகள் கொண்டு செல்வது மற்றும் இறைச்சி கூடங்களில் வெட்டுவதில் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடைகளை அனுமதியின்றி வாகனங்களில் கொண்டு செல்வது, வாகனங்களில் கால்நடைகள் சுவாசிக்க போதுமான இடம் அளிக்காமல் அதி எண்ணிக்கையில் நெருக்கமாக ஏற்றி செல்வது சட்டப்படி குற்றமாகும். மேலும் போதிய உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ வசதிகள், முதலுதவி வழங்காமல் கொண்டு செல்வதும் குற்றமாகும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்படும்.மேலும், வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கால்நடைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும். விதிமுறைகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.அதேபோல் இறைச்சி கூடங்களில் கால்நடைகள் வெட்டுப்படுவது தொடர்பாக மிருகவதை தடுப்பு விதிகளின் கீழ் கண்காணிக்கப்படும். இறைச்சி கூடங்களில் வெட்டப்படும் கால்நடைகள், கால்நடை உதவி மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு உரிய சான்று பெற்ற பின்னரே கால்நடைகள் இறைச்சி கூடங்களில் வெட்டப்பட்டு முத்திரையிடப்பட்டு பின்பு விற்பனைக்கு அனுப்ப வேண்டும். கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தனி நபர்கள் தகுதிவாயந்த அதிகார அமைப்பினரிடம் விண்ணப்பித்து உரிய சான்று பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை