உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்விரோத தகராறு: போலீஸ் விசாரணை

முன்விரோத தகராறு: போலீஸ் விசாரணை

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் முன் விரோதத்தில் கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 37; தி.மு.க., வார்டு செயலாளர். பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், இரு தரப்பினரும் வீட்டு ஜன்னல் கண்ணாடி, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.இதுகுறித்து இரு தரப்பினரும் நேற்று இரவு கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ