மேலும் செய்திகள்
இ.பி.எஸ்., பிறந்த நாள் கொண்டாட்டம்
13-May-2025
தியாகதுருகம்: தியாகதுருகத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு 2,671 பேர், பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர்.தியாகதுருகம் அ.தி.மு.க., சார்பில் நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒருங்கிணைத்தார். முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, நகர செயலாளர் ஷியாம்சுந்தர், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கதிர் தண்டபாணி, ராஜசேகர், ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, டாக்டர் பொன்னரசு முன்னிலை வகித்தனர்.ஒன்றிய நகர மகளிர் அணி தொண்டர்கள், 2,671 பேர் பால்குடம் ஏந்தி புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட செயலாளர் குமரகுரு துவக்கி வைத்தார். மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் அருகில் உள்ள சிவன் கோவில் மூலவருக்கு பாலபிஷேகமும், தொடர்ந்து ஆராதனையும் செய்யப்பட்டது. பின்னர் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., நிர்வாகிகள் ராஜவேல், அய்யம்பெருமாள், கிருஷ்ணராஜ், சுப்ரமணியன், மணிவண்ணன், பாலகிருஷ்ணன், குமரவேல், மூர்த்தி, மணி, பரியாஸ், வரலட்சுமி, காமராஜ், ஏழுமலை, வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
13-May-2025