மாற்றுக் கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்
ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க., வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், நிர்வாகி சாமிசுப்ரமணியன், தி.மு.க., தலைமை கழக பொறுப்பாளர் பெருநற்கிள்ளி முன்னிலை வகித்தனர்.ரிஷிவந்தியம் ஒன்றியம் பாசார் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க., வில் இணைந்தனர். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜி, மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.