உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

 அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேகம்

உளுந்துார்பேட்டை: எலவனாசூர்கோட்டை அங்காளம்மன், முருகன், கன்னிமார்கள், நவக்கிரகங்கள், பாவாடைராயன், நாககன்னி, பைரவர் ஆகிய கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் வாஸ்து பூஜை, ஹோமம் விக்னேஸ்வர பூஜை, கலச அலங்காரம், முதல் கால ஹோமம் நடந்தது. நேற்று காலை 4:30 மணியளவில் கோ பூஜை, இரண்டாம் கால ஹோமம், பூர்ணாகுதி தீபாரதனை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடும், காலை 8:30 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி