அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார். இதில்,ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல், கூடுதல் பொறுப்பு பார்க்கும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.போராட்டத்தில் சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் செந்தில், துணை செயலாளர் ஏழுமலை, மோகன், பொருளாளர் வீரசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.