உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ. 7.45 கோடி வர்த்தகம்

அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் 5 நாட்களில் ரூ. 7.45 கோடி வர்த்தகம்

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ரூ. 7.45 கோடி வர்த்தகமானது.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டியில் அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதற்கு காரணம் வியாபாரிகள் நேரடியாக ஏலத்தில் பங்கேற்று, விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்வதுதான். அத்துடன் இ நாம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு விளை பொருட்களுக்கான தொகை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.இதனால் விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாது கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் விளை பொருட்களை அதிக அளவில் கொண்டு வருகின்றனர். தற்பொழுது உளுந்து வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக நேற்று ஆயிரம் மூட்டை உளுந்து, 8000 மூட்டை நெல், 500 மூட்டை மக்காச்சோளம் என 780.94 மெட்ரிக் டன் அளவிற்கு விளை பொருட்கள் ஏலத்துக்கு வந்தது. நேற்று மட்டும் ரூ. 2.46 கோடிக்கு வர்த்தகமானது. குறிப்பாக கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 2467.94 மெட்ரிக்டன் விவசாய விளை பொருட்கள் ஏலத்திற்கு வந்தது. இதன் மூலம் ரூ. 7.45 கோடி வர்த்தகமானது. உளுந்து வரத்து அதிகரித்திருக்கும் அதே நிலையில், அதன் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரு மூட்டை உளுந்தின் சராசரி விலையாக ரூ. 7498 க்கு விற்பனையானது. உளுந்து அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வரும் நாட்களில் இதன் வரத்தும் அதிகரிக்கும். இச்சூழலில் அதன் விலையிலும் ஏற்றம் கண்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை