உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது இடத்தில் மது குடித்தவர் கைது

பொது இடத்தில் மது குடித்தவர் கைது

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தியவரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் எலவனாசூர்கோட்டை ஆசனூர் சாலையில் மேம்பாலம் அருகே ரோந்து சென்றனர்.அப்போது பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தி கொண்டிருந்த எலவனாசூர்கோட்டை அடுத்த மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், 50; கைது செய்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்