உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு கல்லுாரியில் கலை திருவிழா போட்டி

அரசு கல்லுாரியில் கலை திருவிழா போட்டி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவ மாணவிகளுக்கான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. போட்டிகளை கல்லுாரி முதல்வர் தர்மராஜா துவக்கி வைத்தார். தமிழ் துறை தலைவர் மோட்சஆனந்தன் போட்டிகள் குறித்து எடுத்துரைத்தார். இசை, வாத்திய இசை, தனிப் பாடல், மவுன நாடகம், நாடகம் ஆகிய 5 போட்டிகள் நடந்தது. இதில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி பேராசிரியர் பழனிவேல், திருச்சிராப்பள்ளி கலை காவிரி நுண்கலை கல்லுாரி உதவி பேராசிரியர் ஏஞ்சலின் ஐஸ்வர்யா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினர். கல்லுாரி பல்வேறு துறை பேராசிரியர்களும் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிகளை நுாலகர் அசோக்குமார், உடற்கல்வி இயக்குனர் சரவணன், தமிழ் துறை பேராசிரியர் விஜயகுமார் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர். இதில் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை