| ADDED : நவ 24, 2025 06:56 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டார வள மையத்தில் மாற்றுத் திறனாளிகள் மாணவர்களுக்கான மதிப்பீட்டு மருத்துவ முகாம் நடந்தது. சங்கராபுரம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா விளக்கவுரையாற்றினார். வட்டார கல்வி அலுவலர்கள் தனபால், சீனுவாசன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் பேரூராட்சி சேர்மன் ரோஜா ரமணி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர்கள் காது, மூக்கு, தொண்டை, கண் குறைபாடு, உடல் நலம் குறைபாடு, கைகால் குறைபாடு உடைய மாணவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது.