உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

சங்கராபுரம் : தேவபாண்டலத்தில் சிவன் கோவிலில் மார்கழி மாதம் 30 நாட்களும் மாணவர்கள் திருப்பாவை திருவெம்பாவை பாடினர். இம்மாணவர்களுக்கு சங்கராபுரம் வட்ட பிராமணர் சங்கம், தேவபாண்டலம் பிரதோஷ வழிபாட்டு மன்றம் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பிராமணர் சங்க துணைத் தலைவர் சூரியநாராயணன், செயலாளர் ஜெய்குமார், அமைப்பாளர் கணபதி, ஓதுவார் மூர்த்தி அருள் முன்னிலை வகித்தனர். பிராமணர் சங்கத் தலைவர் ரவி குருக்கள் வரவேற்றார். திருப்பாவை திருவெம்பாவை பாடி வழிபாடு நடத்திய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.சைவ சித்தாந்த நிர்வாகிகள் அன்பழகன், நாராயணன், சிவக்குமார், சடையன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை