உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அய்யனார் கோவில் கும்பாபிேஷகம்

அய்யனார் கோவில் கும்பாபிேஷகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் பூரணி, புஷ்கலை சமேத அய்யனார் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம் கோபுர கலசங்கங்கள் வைத்தல், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்தல், அஷ்டபந்தனம் சாற்றுதல், முளைப்பாரி ஊர்வலம், திரவ்ய ஹோமங்கள், வேதபாராயணம் மற்றும் உபசார பூஜைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று அதிகாலை 5:00 மணிக்கு பல்வேறு பூஜைகள் செய்து வைக்கப்பட்டு பூரணி, புஷ்கலை சமேத அய்யனார் கோபுர விமானம், சக்தி விநாயகர், செல்லியம்மன், சடையப்பர், மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து வைத்து மகா தீபாரதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்