மேலும் செய்திகள்
மாலை அணிந்து விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
17-Nov-2024
கள்ளக்குறிச்சி: கார்த்திகை முதல் நாளான நேற்று ஐயப்ப பக்தர்கள் கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில், மாலை அணிந்து கொண்டனர்.மகர விளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதி ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று, குரு சாமியிடம் மணிமாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.இதேபோன்று சிதம்ப ரேஸ்வரர் உள்ளிட்ட கள்ளக் குறிச்சியின் பெரும்பாலான ஐயப்பன் கோவில்களிலும் சபரிமலை ஐயப் பனை தரிசிக்க வேண்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
17-Nov-2024