உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  திருக்கோவிலுார் நுாலகத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா

 திருக்கோவிலுார் நுாலகத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நுாலகத்தில் பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருக்கோவிலுார் கிளை நுாலகத்தில் நடந்த பாரதியாரின் பிறந்தநாள் விழாவிற்கு, வாசகர் வட்டக் குழு தலைவர் உதியன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் செந்தில்குமார், நுாலகபுறவளர் கல்யாண்குமார் முன்னிலை வகித்தனர். நுாலகர் வசந்தி வரவேற்றார். கல்வியாளர் தமிழ்ச்செல்வன் துவக்க உரையாற்றினார். ரோட்டரி சங்கத் தலைவர் கோதம்சந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாரதியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ரோட்டரி சங்க பொருளாளர் காமராஜ்க்கு அவரது நுாலக சேவையை பாராட்டி தொழிலதிபர் சக்திவேல் பட்டயம் வழங்கினார். ரோட்டரி சங்க செயலாளர் ராஜேஷ்குமார் எழுத்தாளர்கள் தங்கராசு, விருதுராஜா, சிதம்பரநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர். நுலக பணியாளர்கள் சம்பத், தேவி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர். நுாலகர் தியாகராசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை