உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் சாலை அமைக்க பூமி பூஜை

ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் சாலை அமைக்க பூமி பூஜை

கச்சிராயபாளையம்: ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது.கச்சிராயபாளையம் அடுத்த ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1.46 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடந்தது. உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைத்தார். துணைச் சேர்மன் அன்புமணிமாறன், மாவட்டத் துணைச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருள், பி.டி.ஓ., செந்தில்நாதன், ஒன்றிய பொறியாளர்கள் அருண்பிரசாத், விஜயன், ஊராட்சி தலைவர் ஜோதிபன்னீர், முன்னாள் தலைவர்கள் மணி, அய்யாவு, ஊராட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ