உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபோதையில் விழுந்த பீகார் வாலிபர் பலி

மதுபோதையில் விழுந்த பீகார் வாலிபர் பலி

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மதுபோதையில் கிழே விழுந்து காயமடைந்த பீகார் வாலிபர் இறந்தார்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்லால் மகன் திப்புகுமார், 30; இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள ஹாலோ பிளாக் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த 6ம் தேதி ரங்கநாதபுரம் டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு நடந்து சென்றார். போதை அதிகமானதால், திப்புகுமார் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவ்வழியாக சென்றவர்கள் திப்புகுமாரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலே திப்புகுமார் இறந்தார். இது குறித்து வி.ஏ.ஓ., பழனிவேல் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ