பைக் திருட்டு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாயமான பைக் குறித்து போலீசார் விசாரிக்கின் றனர். கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மகன் முருகன், 44; இவர், கடந்த 27ம் தேதி கச்சிராயபாளையம் சாலை அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே தனது டி.என்.15. டி.3422 பதிவெண் கொண்ட ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் நிறுத்தி சென்றபோது, பைக் மாயமாகி இருந்தது. திருடு போன பைக்கினை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகார் அளித்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.