உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு காட்டுநெமிலி மக்கள் சாலை மறியல்

நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு காட்டுநெமிலி மக்கள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து காட்டு நெமிலி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.உளுந்துார்பேட்டை நகராட்சியுடன், அருகில் உள்ள காட்டுநெமிலி ஊராட்சி இணைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று காலை 9 மணிக்கு உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் நெடுஞ்சாலையில் 150க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை உளுந்துார்பேட்டை போலீசார் சமாதானம் செய்ததை ஏற்று 9:30 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதே பிரச்னையை வலியுறுத்தி பாண்டூர் கிராம மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி