உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதுஉச்சிமேட்டில் கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் : போலீஸ் விசாரணை

புதுஉச்சிமேட்டில் கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம் : போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: புதுஉச்சிமேடு கிணற்றில் மீட்கப்பட்ட வாலிபர் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் அர்ஜூனன் மகன் பாலமுருகன், 27; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்ற பாலமுருகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். புதுஉச்சிமேடு கிராமத்தை சேர்ந்த அலமேலு என்பவரது விளை நில கிணற்றில் பாலமுருகன் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. பொதுமக்கள் மற்றும் வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் மிதந்த பாலமுருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை