மேலும் செய்திகள்
கூலி தொழிலாளி சாவு
17-Nov-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறந்த கிடந்த கொத்தனார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று காலை 7:00 மணியளவில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த கிடந்த முதியவரின் உடலை விசாரித்தனர். விசாரணையில், இறந்த கிடந்தவர் தியாகதுருகம், கஸ்துாரிபாய் நகரைச் சேர்ந்த கொத்தனார் பழனி, 53; என தெரியவந்தது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-Nov-2025