| ADDED : நவ 18, 2025 07:18 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் ரவுண்டானா அருகே நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5.5 ஏக்கர் பரப்பளவில் 16 கோடியே 21 லட்சம் மதிப்பில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, புதிய புறநகர் பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய பஸ் நிலையத்தில் புற நகர் பஸ்கள், நகர பஸ்கள் நிறுத்தும் பிரிவுகள் அமைக்குமிடம், கடைகள், நேரக்காப்பாளர் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதிகள், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன் அமைப்பது தொடர்பாக கேட்டறிந்தார். ணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது கலெக்டர் பிரசாந்த், நகர மன்ற தலைவர் சுப்ராயலு, நகராட்சி கமிஷனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.