கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.26.10 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 26.10 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு நேற்று மக்காச்சோளம் 1,100 மூட்டை, நிலக்கடலை 25, கம்பு 20, எள் 5, உளுந்து 1 மூட்டை என 1,151 மூட்டை விளை பொருட்கள் கொண்டுவரப்பட்டன. சராசரியாக ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,089 ரூபாயும், நிலக்கடலை 8,034, கம்பு 3,593, எள் 6,974, உளுந்து 4,599 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் நேற்று மொத்தமாக 26 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதேபோல், சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் மக்காச்சோளம் 124 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,099 ரூபாய் என மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 408 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. தியாகதுருகம் கமிட்டியில் நெல் 200 மூட்டை, மக்காச்சோளம் 80, கம்பு 28, எள் 2, உளுந்து ஒரு மூட்டை என மொத்தம் 311 மூட்டை வரத்து இருந்தது. சராசரியாக நெல் 2,359 ரூபாய், மக்காச்சோளம் 2,153, கம்பு 3,589, எள் 7,500, உளுந்து 6,500 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.