மேலும் செய்திகள்
லாரியில் கார் மோதி இருவர் படுகாயம்
03-Aug-2025
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே காஸ் டேங்கர் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். புதுச்சேரி அடுத்த அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு மகன் லட்சுமண பிரகாஷ், 24; இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் இனோவா காரில் கேரளா மாநிலம், மூணாறு பகுதிக்கு சுற்றுலா சென்றார். நேற்று காலை 6:30 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனைத் தாண்டி, எதிர்திசையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற இண்டேன் காஸ் டேங்கர் லோடு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை அண்ணாதுரை மகன் பாலன், 24; தன்ராஜ் மகன் கணேஷ், 23; ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். காயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
03-Aug-2025