உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ேஹாட்டல் மாஸ்டரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

ேஹாட்டல் மாஸ்டரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி : கூகையூரில் பரோட்டா சரியில்லை எனக்கூறி ேஹாட்டல் உரிமையாளரின் தாய் மற்றும் மாஸ்டரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மோகன்குமார், 35; கூகையூர் பஸ் நிறுத்தம் அருகே ேஹாட்டல் வைத்துள்ளார். கடந்த 1ம் தேதி கூகையூரைச் சேர்ந்த அய்யங்கி மகன் பூமாலை பரோட்டா வாங்கிச் சென்றார்.சிறிது நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் கடைக்கு வந்தவர், பரோட்டா நன்றாக இல்லை எனக்கூறி கடையில் இருந்த மோகன்குமாரின் தாய் நிர்மலா மற்றும் ேஹாட்டல் மாஸ்டர் எழிலரசன் ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து மோகன்குமார் அளித்த புகாரின் பேரில், பூமாலை, பத்மநாபன் மகன் சாரதி ஆகிய இருவர் மீதும் கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி