உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பாக்கியலட்சுமி, 30; இவர், கடந்த 6ம் தேதி மலைக்கோட்டாலத்தில் தனது தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம், அவரது மனைவி உமா, அய்யம்மாள், செம்மலை ஆகியோர் பாக்கியலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் ஆறுமுகம் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி