உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலி ஆவணம் தயாரித்து பத்திர பதிவு சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு

போலி ஆவணம் தயாரித்து பத்திர பதிவு சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் : சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணம் தயாரித்து பத்திர பதிவு செய்த சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 52; இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் 50 சென்ட் இடத்தை சங்கராபுரம் ஜெகதீசன் மகன் குமரேசன், 45; பொன்னுசாமி,62; ஆகியோருக்கு கடந்த 2010ல் பவர் கொடுத்து விற்க சொன்னதாக கூறப்படுகிறது.அவர் கூறியபடி நடக்காததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கதிர்வேல் எழுதிக் கொடுத்த பவரை ரத்து செய்தார். அதன்பின் குமரேசன், பொன்னுசாமி ஆகியோர் சங்கராபுரத்தை சேர்ந்த சந்தியா, தேவபாண்டலம் சதிஷ்குமார் ஆகியோருக்கு போலி ஆவணம் தயார் செய்து கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.இந்த மோசடியில் ஈடுபட்ட சங்கராபுரம் பொன்னுசாமி, குமரேசன், தேவபாண்டலம் பன்னீர்செல்வம் மகன் சதிஷ்குமார், குமரேசன் மனைவி சந்தியா, பொன்னுசாமி மகன் ரஜனிகாந்த், டாக்டர் ரவிகுமார், சார்பதிவாளர் கோவிந்தன் உள்பட 7 பேர் மீது கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில், சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ