உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்வாரிய அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு  

மின்வாரிய அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு  

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே மின்சாரம் தாக்கியதில் தற்காலிக ஊழியர் படுகாயமடைந்தார். சங்கராபுரம் அடுத்த செம்படாக்குறிச்சியை சேர்ந்தவர் எத்திராஜ் மகன் பெரியசாமி, 29; இவர், மின்வாரிய துறையில் தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் பொட்டியம் பால் ஸ்டோர் அருகே இருந்த மின்மாற்றி பழுதாகியது. இதையொட்டி பெரியசாமி மின்மாற்றியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பெரிய சாமியின் கை தோல் கருகியது. உடன், அங்கிருந்தவர்கள் பெரியசாமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், மின்வாரிய உதவி பொறியாளர் கருணாநிதி, லைன்மேன் குணசேகரன், வயர்மேன் சுபாஷ்அலி ஆகிய 3 பேர் மீது கச்சிராய பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை