| ADDED : அக் 30, 2025 06:48 AM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வழிபாதை தொடர்பான முன்விரோத தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சின்னசேலம் அடுத்த கல்லாநத்தத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி, 40; அதே கிராமத்தைச் சேர்ந்த வேலு மனைவி ராதா, 33; இரு குடும்பத்தினர் இடையே நிலத்திற்கு செல்லும் பாதை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி பகல் 12.30 மணிக்கு, இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராதா மற்றும் அவரது குடும்பத்தினர் ரேஷ்மா, சரோஜா, மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து ஜெயக்கொடியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பதிலுக்கு ஜெயக்கொடியும் தாக்கியுள்ளார். இது தொடர்பாக இரு தரப்பிலும் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் ராதா, ரேஷ்மா, சரோஜா, மணிகண்டன் ஆகியோர் மீதும் மற்றொரு தரப்பில் ஜெயக்கொடி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.